சிறப்பான மட்டத்தில் ஒளித்தொகுப்பு நடைபெறப் பங்களிப்புச் செய்யும் காரணிகள்
ஒளித்தொகுப்பு பற்றிய எண்ணக்கரு
ஞாயிற்றுத்தொகுதி 5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது
புவி 4.5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது
முதலாவது உயிரினமாகிய “இரசாயனப் பிறபோசனிப் Bacteria”  3.5 Billion வருடங்களுக்கு முன்னர் தோன்றியது அதிலிருந்தே ஏனைய உயிரங்கிகள் கூர்ப்படைந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனையே உயிர் இரசாயனக் கூர்ப்புக் கொள்கை விளக்குகின்றது.
அக் கொள்கை பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயிர் இரசாயனக் கூர்ப்புக்கொள்கை
ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள சூரியனுடன் பெரிய வால்வெள்ளி/ விண்கல் மோதியதன் விளைவாகவே இக் கோள்மண்டலங்கள் உருவாகியதாகவும் அதில் ஒன்று தான் புவியெனக் கூறப்படுகிறது.
புவி உருவாகிய வேளையில் உயர் வெப்பநிலையும் N2, H2, CO2, H2O, H2S, NH3 ஆகிய எளிய வாயு மூலக்கூறுகளைக் கொண்ட வளிமண்டலம் காணப்பட்டதெனவும் பின்பு படிப்படியாக புவி குளிர்ச்சியடைந்து நீராவி ஒடுங்கி மழையாகப் பெய்ததன் மூலம் அந்நீர் புவியின் பள்ளமான பகுதிகளில் தேங்கியதன் விளைவாக சமூத்திரங்கள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது வளிமண்டலத்தில் காணப்பட்ட இவ்வாயுக்கள் மழைநீரில் கரைந்து அவை சமுத்திரத்தின் ஆழமான பகுதிகளில் படிந்து “அழுக்குப்படலம்(Concervate)” உருவாக்கப்பட்டது.
அத்துடன் மழைபெய்கின்ற வேளையில் ஏற்பட்ட மின்னலினால்/ மின்னிறக்கங்கள் காரணமாக இவ் அழுக்குப்படலத்தில் மாற்றம் ஏற்பட்டு அவை சேதனச்சேர்வைகளை உருவாக்கி அதிலிருந்து முதலாவது உயிரினம் தோன்றியதென நம்பப்படுகின்றது.
சேதனச்சேர்வைகள் (Organic Compounds)
இவை நான்கு வகைப்படும்.
1. காபோவைதரேற்று (Carbohydrates)
2. இலிப்பிட்டு (Lipids)
3. புரதம் (Protein)
4. நியூக்கிளிக்கமிலங்கள் (Nucleic Acids)
Note :-
சில விரிவாக்கங்கள்
1. DNA - Deoxy Ribose Nucleic Acid
2. RNA - Ribo Nucleic Acid
3. ATP - Adenosine Tri Phosphate
4. ADP - Adenosine Di Phosphate
5. NAD - Nicotinamide Adenine Di nucleotide
6. FAD - Flavin Adenine Di nucleotide
மேலும் 12 Million ஆண்டுகளின் பின்பு அங்கிகளில் பச்சையத்தினுள் குளோரோபில் எனும் சேர்வை உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஒளிச்சக்தியை/ ஞாயிற்றுச்சக்தியை உறிஞ்சி அவ்வங்கிகள் ஒளித்தொகுப்புச் செயன்முறையில் ஈடுபட்டன.

ஒளித்தொகுப்பு (Photosynthesis)
ஒளித்தொகுப்பின் முக்கியத்துவம்
இற்றைக்கு 2.7 Billion ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும் சில இரசாயனத் தொகுப்பு Bacteria கள் இன்றும் கூட தனிக்கல அங்கிகளாக வாழ்ந்து வருகின்றன. இவற்றிலிருந்தே பல்கல அங்கிகள் தோன்றி ஒளித்தொகுப்பு செய்யக்கூடிய உயர் தாவரங்களாக வியத்தமடைந்தன.
ஒளித்தொகுப்பின்போது ஒட்சிசன் வெளிவிடப்படுகின்றது. இவ் ஒட்சிசன் காரணமாக காற்றுச்சுவாச அங்கிகள் வாழ்வதற்கேற்ற சூழலொன்று தாவரங்களினால் உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாகிய ஒட்சிசனில் இருந்து ஓசோன்படை உருவாகி உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கழியூதாக் கதிர்கள் புவியை வந்தடைவது தடுக்கப்பட்டது.
அத்துடன் பச்சைவீட்டு வாயுவான காபனீரொட்சைட்டு தாவரங்களால் பயன்படுத்தப்பட்டதால் அங்கிகள் வாழக்கூடிய சூழலாக புவி மாற்றமடைந்தது.
உணவுச்சங்கிலியின் உற்பத்தியாக்கிகளான தாவரங்களே ஒளித்தொகுப்புச் செயன்முறையின் மூலம் ஞாயிற்றுச்சக்தியை புவியினுள் பதிக்கின்றன. எனவே தாவரங்கள் தோன்றியிருக்காவிடின் இப்புவியில் மனிதனோää ஏனைய அங்கிகளோ தோன்றியிருக்க முடியாது.
ஒளித்தொகுப்பு விளைபொருட்கள்
பச்சையத்தைக் கொண்ட தாவரங்கள் ஒளி உள்ளபோது நீர், காபனீரொட்சைட்டைப் பயன்படுத்தி சேதன உணவைத்தொகுக்கும் அனுசேபச் செயன்முறை ஒளித்தொகுப்பு எனப்படும்.
1. அகக் காரணிகள்
2. புறக்காரணிகள்
2. நீர்
3. காபனீரொட்சைட்டு
2. குளுக்கோசு
ஒளித்தொகுப்பு விளைபொருட்கள்
பச்சையத்தைக் கொண்ட தாவரங்கள் ஒளி உள்ளபோது நீர், காபனீரொட்சைட்டைப் பயன்படுத்தி சேதன உணவைத்தொகுக்கும் அனுசேபச் செயன்முறை ஒளித்தொகுப்பு எனப்படும்.
ஒளித்தொகுப்புக்கு அவசியமான காரணிகள்
இவை இரு வகைப்படும்1. அகக் காரணிகள்
2. புறக்காரணிகள்
ஒளித்தொகுப்புக்கு அவசியமான அகக் காரணிகள்
  1. பச்சையவுருமணியில் உள்ள குளோரோபில்
ஒளித்தொகுப்புக்கு அவசியமான புறக்காரணிகள்
  1. சூரியஒளி2. நீர்
3. காபனீரொட்சைட்டு
ஒளித்தொகுப்பின் விளைபொருட்கள்
  1. ஒட்சிசன்2. குளுக்கோசு
ஒளித்தொகுப்புக்கு அவசியமான காரணிகளை இனங்காணல்
ஒளித்தொகுப்புக்கு பச்சையம் அவசியமெனக்காட்டல்
பன்னிறக் குறோட்டன் இலை/ பச்சையமற்ற நிறமுள்ள இலைகளைக் கொண்ட சட்டித் தாவரத்தை 48 மணித்தியாலம் இருளில் வைத்த பின் சூரிய ஒளிபடக் கூடியவாறு அத் தாவரம் 4-5 மணித்தியாலத்திற்கு வைக்கப்பட்டது.
அத் தாவரத்திலிருந்து சில இலைகள் பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இலையில் பச்சையமுள்ள பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. பச்சையமற்ற பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு பச்சையம் அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்.
ஒளித்தொகுப்புக்கு காபனீரொட்சைட்டு அவசியமெனக்காட்டல்
துணிக்கைகள் செறிவு கூடிய இடத்தில் இருந்து செறிவு குறைவான இடத்திற்கு அசைதல் பரவல் எனப்படும்.
Eg:- தாவரங்களின் கலச்சுவரினூடாக நீர் கடத்தப்படுதல்
பிரசாரணம் (Osmosis)
பங்கீடுபுகவிடும் மென்சவ்வினூடாக நீர் மூலக்கூறுகளின் செறிவு கூடிய இடத்திலிருந்து நீர் மூலக்கூறுகளின் செறிவு குறைந்த இடத்திற்கு நீர் மூலக்கூறுகள் கொண்டு செல்லப்படுதல் பிரசாரணம் எனப்படும்.
Eg:- மண்ணிலிருந்து தாவரங்களின் வேரினூடாக நீர் அகத்துறிஞ்சப்படுதல்.
திணிவுப்பாய்ச்சல் (Mass flow)
இரு இடங்களுக்கு இடயிலான அமுக்க வேறுபாடு காரணமாக கரைசல் நிலையில் பதார்த்தங்கள் திணிவாக எடுத்துச் செல்லப்படல் திணிவுப்பாய்ச்சல் எனப்படும்.
Eg:- தாவரங்களின் உரியக்கலங்கள், கலச்சுவரினூடாக பதார்த்தங்கள் கொண்டு செல்லப்படல்.
உட்கொள்கை (Inhibition)
செறிவுப்படித்திறன் வழியே நீர் விருப்புள்ள மூலக்கூறுகள் நீரைப் புறத்துறுஞ்சுவதன் மூலம் நீர் அசைதல் உட்கொள்கை எனப்படும்.
Eg:- வித்துக்கள் நீரில் இடப்படும்போது அவை வீங்குதல் உட்கொள்கை ஆகும்
ஆவியாதல் (Evaporation)
இலைநடுவிழையக் கலங்களிலுள்ள நீர் ஆவிநிலையில் கலத்தடைவெளி களினுள் வெளியேறுதல் ஆவியாதல் எனப்படும்.
Eg:- தாவர மேற்பரப்பினூடாக நீரின் ஆவியுர்ப்பு
இலைவாய்களினூடாக நீரின் ஆவியுர்ப்பு
இளம் தாவரவேரின் கட்டமைப்பு
பூக்கும் தாவரங்கள் ஒருவித்திலைத்தாவரங்கள், இருவித்திலைத்தாவரங்கள் என இருவகைப்படும்.
ஒருவித்திலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டு அமைப்பு
இருவித்திலைத் தாவரவேரின் அமைப்பு
கனியுப்புக்கள் கரைந்துள்ள நீர் தாவரவேர்களிலிருந்து உயரமான பகுதியை நோக்கி எடுத்துச் செல்லப்படலே சாற்றேற்றம் எனப்படும்.
பொதுவாக தாவரவேர்களிலிருந்து இலைகள் வரை காழினூடாக நீரும் அதில் கரைந்துள்ள பதார்த்தங்களும் செல்லும். காழினூடாக இந்நீர் தொடர்ச்சியாக அறுபடாது, மேல் நோக்கிச் செல்லும். இந்நீர் நிரலில் வளிக் குமிழிகள் காணப்படுவதில்லை. நீர்நிரல் தொடர்ச்சியாகக் காணப்படுவதற்கு இரு காரணங்கள் உள்ளன.
1. பிணைவு விசை
2. ஒட்டற்பண்பு விசை
இது போன்றே ஆவியுயிர்ப்பின் மூலம் தாவர இலைகளிலிருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் இலைகளிலிருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் இலையின் இழுவை காரணமாக காழினூடாக நீர் மேலேறும். இது ஆவியுர்ப்பு இழுவிசை எனப்படும்.
மேலும் தாவரங்களின் காழ்கலன்களினூடாக நீரும் அதிற் கரைந்துள்ள கனியுப்புக்களும் மேல்நோக்கி ஏறுவதற்கு வேரினால் தள்ளுகை பிரயோகிக்கப்படும். இது வேரமுக்கம் எனப்படும்.
வேரமுக்கம் மூலமாக தாவரங்களில் நீரைக்கொண்டு செல்லக்கூடிய உச்ச உயரம் 18 மீற்றர் ஆகும். எனினும் உயரமான தாவரங்களின் பகுதிகளிற்கு பிரதானமாக ஆவியுர்ப்பு இழுவிசை மூலமே நீர் எடுத்துச் செல்லப்படுகின்றது. இது தாவரங்களில் நீரைக்கொண்டு செல்லக்கூடிய உச்ச உயரம் 50 - 60 மீற்றர் ஆகும்.
இவை தவிர பூண்டுத்தாவரங்களில் (புற்களில்) நீரைக்கொண்டு செல்லலில் மயிர்த்துளை ஏற்றம் எனும் இழுவிசையும் தொழிற்படுகின்றது. எனினும் அது 10 - 15 சென்ரி மீற்றர் வரையுமே தொழிற்படக்கூடியது.
ஆவியுயிர்ப்பு(Transpiration)
தாவரங்களின் காற்றுக்குரிய பகுதிகளில் இருந்து நீர் ஆவிநிலையில் வெளியேறுதல/ இழக்கப்படல் ஆவியுயிர்ப்பு எனப்படும்.
இது மூன்று வகைப்படும்.
1. இலைவாய் ஆவியுயிர்ப்பு
2. புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு.
3. பட்டைவாய் ஆவியுர்ப்பு.
இலைவாய் ஆவியுயிர்ப்பு
இது மொத்த ஆவியுர்ப்பில் அதிகளவில் நடைபெறும். (80-90%)
இவ் ஆவியுயிர்ப்பு இலைகளிலுள்ள இலைவாய்களினூடாகவே அதிகளவில் நிகழ்கின்றது. இதனால் இது இலைவாய் ஆவியுயிர்ப்பு எனப்படும்.
புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு.
இது மொத்த ஆவியுர்ப்பில் 10-20% நிகழும்.
இவ் ஆவியுயிர்ப்பு தாவரத்தின் பூக்கள், காய்கள் போன்றவற்றின் புறத்தோலினூடாக நீர் ஆவி நிலையில் வெளியேறுதல் இது புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு எனப்படும்.
வரள்நிலத் தாவரங்களில் தண்டு நன்கு தடித்திருப்பதனால் இவ் ஆவியுயிர்ப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்படும்.
பட்டைவாய் ஆவியுர்ப்பு
இவ் ஆவியுயிர்ப்பு தடித்த வைரம் செறிந்த தாவரப்பகுதியில் உள்ள பட்டைவாய்களினூடாக நீர் ஆவியாக இழக்கப்படல் பட்டைவாய் ஆவியுர்ப்பு எனப்படும்.
இது புறக்கத்தக்கது.
இருவித்திலைத் தாவர இலையின் குறுக்கு வெட்டுமுகம்
Note:- தாவர இலைகளில் இருந்து அதிகளவான நீர் அவியாக வெளியேறு கின்றது.
தாவரங்களில் நீர்ப்பற்றாக்குறை எவ்வாறு ஏற்படுகின்றது எனக்காட்டல்
ஒரு சட்டித்தாவரத்தின் ஒரு சிறு கிளையை பொலித்தீன் உறையினால் மூடிக்கட்டி சில மணி நேரத்தின் பின்பு அவதானித்தபோது அப் பொலித்தீன் உறையின் உட்புறத்தில் நீர்த்துளிகள் படிந்து காணப்படும். அந்நீர்த்துளிகள் நீரற்ற செப்புசல்பேற்றை நீலநிறமாக மாற்றும் இதிலிருந்து தாவரங்களி லிருந்து நீர் வெளியேறுகின்றது என முடிவு செய்யலாம். எனினும் இந்நீர் வெளியேற்றம் கண்களுக்குப் புலப்படமாட்டாது. எனவே நீரானது ஆவி நிலையில் வெளியேறியுள்ளது. அந்நீர் குளிர்ச்சியடைந்து பொலித்தீன் உறையின் உட்சுவரில் நீர்த்துளிகளாகப் படியும்.
ஆவியுர்ப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
நீர் ஆவிநிலையில் தாவரங்களிலிருந்து வெளியேறுதலே ஆவியுயிர்ப்பு ஆகும்.எனவே ஆவியாதலைப் பாதிக்கும் எல்லாக் காரணிகளும் ஆவியுர்ப்பையும் பாதிக்கும்.
ஆவியுர்ப்பில் பங்களிப்புச் செய்யும் சூழற்காரணிகள்
1. சூழல் வெப்பநிலை
2. வளிமண்டல ஈரப்பதன்
3. காற்றின் வேகம்
4. ஒளிச்செறிவு
5. மண்ணீரின் அளவு
சூழல் வெப்பநிலை
வெப்பநிலை அதிகரிக்கும் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
வளிமண்டல ஈரப்பதன்
வளிமண்டல ஈரப்பதன், வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவில் தங்கியுள்ளது. எனவே வளியிலுள்ள நீராவியினளவு குறையும் போது வளிமண்டல ஈரப்பதன் குறையும். இதனால் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
காற்றின் வேகம்
காற்றின் மூலமாக இலையைச் சூழ்ந்து காணப்படும் நீராவி எடுத்துச் செல்லப்படும். எனவே காற்றின் வேகம் அதிகரிக்கும் போது ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
ஒளிச்செறிவு
ஒளியுள்ளபோது இலைவாய்கள் திறந்திருக்கும். ஆகவே வெப்பநிலையும் அதிகமாகக் காணப்படும் எனவே ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
மண்ணீரின் அளவு
கிடைக்கத்தக்க மண்ணீரின் அளவு அதிகரிக்கும் போது தாவரங்களில் அகத்துறிஞசப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும். இதனால் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
உறிஞ்சன்மானியையும் தாவரத்துடன் சேர்ந்த கிளையையும் நீரினுள் அமிழ்த்தி நீரினுள் வைத்து கிளையை வெட்டி படத்திற்காட்டியவாறு பொருத்திக் கொள்ள வேண்டும். தண்டினுள் வளிக் குமிழிகள் செல்வதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு நீரினுள் வைத்து வெட்டப்படும். பின்னர் கிளை பொருத்தப்பட்ட பகுதிகள் வசலீன் கொண்டு வளியிறுக்கம் செய்யப்படும்.
மேலும் உறிஞ்சன்மானியின் மயிர்த்துளைக் குழாயை நுனியை சற்று உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் வளிக்குமிழியொன்றை அதன் திறந்த முனையினூடாக உட்செல்ல அனுமதிக்கப்படும்.
இலைகளிலிருந்து ஆவியுயிர்ப்புமூலம் நீர் வெளியேறும்போது வளிக்குமிழிää கிளை பொருத்தப்பட்டு உள்ள திசையை நோக்கி அசையும்ää குழாயில் அளவிடை குறிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் வளிக்குமிழி அசைந்த தூரத்தை அளந்து கொள்க அத்துடன் அதற்கு எடுத்த நேரத்தை அளந்து கொள்க.
இதிலிருந்து பல்வேறு சூழல் நிலமைகளில் வைத்து ஆவியுயிர்ப்பு வீதத்தை துணிந்து கொள்ள முடியும்.
தாவரங்களில் ஆவியுர்ப்பின் பிரதிகூலங்கள்
1. தாவரங்களில் நீரிழப்பு ஏற்படும்.
2. தாவரங்கள் வாடுவதால் ஒளித்தொகுப்புப் பாதிக்கப்படல்.
கசிவு
அதிகாலை வேளையில் புற் தாவரங்களின் இலைகளின் நுனிகளிலும்ää சேம்புத் தாவரங்களின் இலைகளின் நுனிகளிலும் திரவத்துளிகள் காணப்படுவதை அவதானிக்கலாம். இவை இத்தாவர உட்பகுதியிலிருந்து நீர் செல்துளைகளினூடாக வெளியேறிய நீர்த்துளிகள் கசிவு ஆகும். இவை பின்வரும் கூறுகளைக் கொண்டன.
அதிகளவு நீர் + கரையப்பதார்த்தங்கள் + கனியுப்புக்கள்
இது வேரமுக்கத்தின் ஒரு நேரடி விளைவாகும். ஆவியுர்ப்பிற்கு எதிரான நிபந்தனைகளிலேயே இது நடைபெறும். ஏனெனில் மண்ணீர் அடக்கமும் சாரீரப்பதனும் உயர்வாக இருக்கும் போதே பெரும்பாலான தாவரங்களில் வேரமுக்கம் ஏற்படும் இச்சந்தர்ப்பங்களில் தாவரத்தினுள் அயன்கள் உயிர்ப்பான அகத்துறிஞ்சல் மூலம் உட்செல்லும் இவ்வயன்கள் வேரின் காழினுள் கரையச் செறிவை அதிகரிப்பதனால் அதன் நீரழுத்தம் மண்ணீர் அழுத்தத்தை விடக்குறையும். எனவே தாவரத்தினுள் நீர் உட்செல்லும் இதன் காரணமாக ஏற்படும் அமுக்கமே வேரமுக்கமாகும்.
•  சாதாரண மனிதனின் உடலில் 5.5 லீற்றர் குருதி காணப்படும். எனினும்
அது மனித உடல் நிறைக்கேற்ப மாறுபடலாம்.
• எமது உடலில் வெட்டுக்காயம் அல்லது உராய்வு ஏற்படும் போது குருதி
வெளியேறும். பொதுவாக எமது உடலில் இருந்து ஒரு துளி குருதி
வெளியேறினால் அது மீண்டும் உருவாக 20 நிமிடங்கள் வரை எடுக்கும்.
• உடலில் குருதி ஆனது குருதிக் கலன்களினுள் காணப்படுகின்றது.
செங்குருதிக்கலங்கள்/ செங்குழியங்கள் (Red Blood Cells/ Erythrocytes)
• 7.5µm விடடமுடைய கலங்கள்.
• சிறிய/ கருவற்ற/ ஈமோகுளோபின் எனும் செந்நிறப்பொருளைக் கொண்ட
கலங்கள்.
• இரு குழிவான வட்டத்தட்டுருவான கலங்கள். இவை தனியாகவோ அல்லது
தொகுதிகளாகவோ குருதிப்பாய்மத்தில் இயங்கிய வண்ணம் காணப்படும்.
• இக்கலங்களின் விட்டம் குருதிமயிர்க்குழாய்களின் உள்விட்டத்தை ஒத்துக்
காணப்படுவதனால் குருதிமயிர்க்குழாய்களினூடாக மெதுவாகவே
அசைகின்றன.
• இதன் காரணமாக வாயுப்பரிமாற்றம் வினைத்திறனாக நடைபெறுகின்றது.
• 1ml3 குருதியில் 5,000,000 செங்குழியங்கள் உள்ளன.
• செங்குழியங்களிலுள்ள ஈமோகுளோபின் காரணமாக குருதிக்குச் செந்நிறம்
கிடைக்கின்றது. இது இரும்பைக்கொண்ட Haematin எனும்
குருதிநிறப்பொருளையும், Globin எனப்படும் புரதத்தையும் கொண்டு
காணப்படும்.
• செங்குழியங்கள் மனிதனின் இளம்பருவத்தில் ஈரலிலும், மண்ணீரலிலும்
உருவாக்கப்படுகின்றன. எனினும் நிலையுடலி நிலையில் செவ்வென்பு
மச்சையில் உருவாக்கப்படுகின்றன.
• செங்குழியங்கள் 4மாதம்/ 120 நாட்கள் வாழ்தகவுடையவை.
• இவை தங்களின் வாழ்தகவின் பின்னர் ஈரல், மண்ணீரல் ஆகியவற்றில்
அழிக்கப்படுகின்றன.
செங்குழியத்தின் தொழில்கள்
1.ஒட்சிசன்செறிவு கூடிய இடத்திலிருந்து ஒட்சிசன்செறிவு குறைந்த
இடத்திற்கு ஒட்சிசனை ஒட்சி ஈமோகுளோபின் வடிவில் கடத்துதல்.
இதன்போது குருதியின் செந்நிறம் அதிகரித்துக் காணப்படும்.
2.சுவாச மேற்பரப்பிலிருந்து செல்லும் குருதி, கலங்களை அடைந்தவுடன்
ஒட்சிஈமோகுளோபின் பிரிகையடைந்து ஒட்சிசன் வெளிவிடப்படும்.
இவ்வாறு வெளிவிடப்படும் ஒட்சிசன் கலங்களினுள் பரவலடையும்.
அத் தாவரத்திலிருந்து சில இலைகள் பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இலையில் பச்சையமுள்ள பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. பச்சையமற்ற பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு பச்சையம் அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்.
ஒளித்தொகுப்புக்கு காபனீரொட்சைட்டு அவசியமெனக்காட்டல்
மேலே படத்தில் காட்டியவாறு பச்சை நிறமுள்ள இலைகளைக் கொண்ட சட்டித் தாவரத்தை 48 மணித்தியாலம் இருளில் வைத்த பின் சூரிய ஒளிபடக் கூடியவாறு அத் தாவரம் 4-5 மணித்தியாலத்திற்கு வைக்கப்பட்டது. பின்னர் தொகுதி A இனுள் காபனீரொட்சைட்டை உறுஞ்சுவதற்கு KOH கரைசலும் தொகுதி B இனுள் நீரும் இடப்பட்டது.
தொகுதி A, தொகுதி B  தாவரத்திலிருந்து சில இலைகள் பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தொகுதி B  இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. தொகுதி A இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு/ ஒளித்தொகுப்புக்கு காபனீரொட்சைட்டு  அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்
ஒளித்தொகுப்புக்கு ஒளி அவசியமெனக்காட்டல்
பச்சை நிறமுள்ள இலைகளைக் கொண்ட சட்டித் தாவரத்தை 48 மணித்தியாலம் இருளில் வைத்தது பின்னர் அத்தாவரத்தின் இலையொன்றை தெரிவு செய்து அதன் ஒரு பகுதியைக் கறுப்புத் தாளினால் நன்கு மூடுக. அப்பகுதி மீது வழுக்கிகளை இருபுறமும் வைத்து இறப்பர்ப்பட்டியினால் கவனமாகச் சுற்றிக் கட்டுக. பின் அவ்விலையினை 4-5 மணித்தியாலத்திற்கு சூரிய ஒளிபடக் கூடியவாறு வைக்க
இலை பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. (கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)
பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ஒளிபடவிடப்பட்ட  இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. ஒளிபடவிடப்படாத இலையின் பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டவில்லை.
எனவே இலைகளில் உணவு உற்பத்திக்கு சூரிய ஒளி அவசியம் என்ற முடிவுக்கு வரலாம்
தாவரங்களின் நிலவுகைக்குக் கொண்டுசெல்லற் செயன்முறை பங்களிப்புச் செய்யும் முறையை ஆராய்தல்
தாவரத்தின் வேரினால் அகத்துறிஞ்சப்படும் நீர், கனியுப்புக்கள் காழ் இழையத்தினூடாக தாவரத்தின் ஏனைய பகுதிகள் முழுவதற்கும் கடத்தப்படுகின்றது.
இக்கடத்தல்/ கொண்டு செல்லல் இரு வகைப்படும்.
  1. உயிர்ப்பான கடத்தல்
  2. உயிர்ப்பற்ற கடத்தல்
உயிர்ப்பான கடத்தல்(Active Transport)
அனுசேபத்தின் போது உருவாக்கப்படும் ATP சக்தியைப்பயன்படுத்தி பதார்த்தப்பரிமாற்றம் நிகழுமாயின் அது உயிர்ப்பான கடத்தல் ஆகும்
Eg:- தாவரங்களில் கனியுப்பு அயன்கள் உயிர்ப்பான கடத்தல் மூலமே அகத்துறிஞ்சப்படுகின்றன.
உயிர்ப்பற்ற கடத்தல்(Passive Transport)
அனுசேப சக்தி விரயமின்றி / ATP சக்தியைப்பயன்படுத்தாது பதார்த்தப் பரிமாற்றம் நிகழுமாயின் அது உயிர்ப்பற்ற கடத்தல் ஆகும்
இது பின்வரும் முறைகளில் நிகழும்
  1. பரவல் (Diffusion)
  2. பிரசாரணம் (Osmosis)
  3. திணிவுப்பாய்ச்சல் (Mass flow)
  4. உட்கொள்கை (Inhibition)
  5. ஆவியாதல் (Evaporation)
பரவல் (Diffusion
துணிக்கைகள் செறிவு கூடிய இடத்தில் இருந்து செறிவு குறைவான இடத்திற்கு அசைதல் பரவல் எனப்படும்.
Eg:- தாவரங்களின் கலச்சுவரினூடாக நீர் கடத்தப்படுதல்
பிரசாரணம் (Osmosis)
பங்கீடுபுகவிடும் மென்சவ்வினூடாக நீர் மூலக்கூறுகளின் செறிவு கூடிய இடத்திலிருந்து நீர் மூலக்கூறுகளின் செறிவு குறைந்த இடத்திற்கு நீர் மூலக்கூறுகள் கொண்டு செல்லப்படுதல் பிரசாரணம் எனப்படும்.
Eg:- மண்ணிலிருந்து தாவரங்களின் வேரினூடாக நீர் அகத்துறிஞ்சப்படுதல்.
திணிவுப்பாய்ச்சல் (Mass flow)
இரு இடங்களுக்கு இடயிலான அமுக்க வேறுபாடு காரணமாக கரைசல் நிலையில் பதார்த்தங்கள் திணிவாக எடுத்துச் செல்லப்படல் திணிவுப்பாய்ச்சல் எனப்படும்.
Eg:- தாவரங்களின் உரியக்கலங்கள், கலச்சுவரினூடாக பதார்த்தங்கள் கொண்டு செல்லப்படல்.
உட்கொள்கை (Inhibition)
செறிவுப்படித்திறன் வழியே நீர் விருப்புள்ள மூலக்கூறுகள் நீரைப் புறத்துறுஞ்சுவதன் மூலம் நீர் அசைதல் உட்கொள்கை எனப்படும்.
Eg:- வித்துக்கள் நீரில் இடப்படும்போது அவை வீங்குதல் உட்கொள்கை ஆகும்
ஆவியாதல் (Evaporation)
இலைநடுவிழையக் கலங்களிலுள்ள நீர் ஆவிநிலையில் கலத்தடைவெளி களினுள் வெளியேறுதல் ஆவியாதல் எனப்படும்.
Eg:- தாவர மேற்பரப்பினூடாக நீரின் ஆவியுர்ப்பு
இலைவாய்களினூடாக நீரின் ஆவியுர்ப்பு
இளம் தாவரவேரின் கட்டமைப்பு
பூக்கும் தாவரங்கள் ஒருவித்திலைத்தாவரங்கள், இருவித்திலைத்தாவரங்கள் என இருவகைப்படும்.
இவ்விருவகையினதும் வேர்களின் அமைப்பில் வேறுபாடு காணப்படு கின்றது.
ஒருவித்திலைத் தாவரவேரின் அமைப்பு
ஒருவித்திலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டு அமைப்பு
இருவித்திலைத் தாவரவேரின் அமைப்பு
ஒருவித்திலைத்தாவரவேரின் அமைப்புக்கும் இருவித்திலைத்தாவரவேரின் அமைப்புக்கும் இடையிலான வேறுபாடுகள்
வேர்மயிர்கள்(Root Hairs)
இருவித்தாவரத்தின் மேற்பரப்பிலுள்ள தனிக்கலப்படையில் உள்ள சில கலங்கள் வெளி நீட்டங்களைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. இவ்வமைப்புக்கள் வேர்மயிர்கள் எனப்படும்.
நீர், கனியுப்புக்கள் ஆகியவற்றை அகத்துறிஞ்சுவதற்கென வேரில் காணப்படும் இசைவாக்கங்கள்
1. இரு வித்திலைத்தாவரங்களில் வேர்கள் கிளைத்துக் காணப்படல்.
2. ஒரு வித்திலைத்தாவரங்களில் அனேக எண்ணிக்கையான வேர்கள் 
    காணப்படல்.
3. வேர்மயிர்கள் காணப்படல்
4. வேர்மயிரின் மேற்பரப்பு மெல்லியதாகக் காணப்படல்
சாற்றேற்றம்
கனியுப்புக்கள் கரைந்துள்ள நீர் தாவரவேர்களிலிருந்து உயரமான பகுதியை நோக்கி எடுத்துச் செல்லப்படலே சாற்றேற்றம் எனப்படும்.
பொதுவாக தாவரவேர்களிலிருந்து இலைகள் வரை காழினூடாக நீரும் அதில் கரைந்துள்ள பதார்த்தங்களும் செல்லும். காழினூடாக இந்நீர் தொடர்ச்சியாக அறுபடாது, மேல் நோக்கிச் செல்லும். இந்நீர் நிரலில் வளிக் குமிழிகள் காணப்படுவதில்லை. நீர்நிரல் தொடர்ச்சியாகக் காணப்படுவதற்கு இரு காரணங்கள் உள்ளன.
1. பிணைவு விசை
2. ஒட்டற்பண்பு விசை
இது போன்றே ஆவியுயிர்ப்பின் மூலம் தாவர இலைகளிலிருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் இலைகளிலிருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் இலையின் இழுவை காரணமாக காழினூடாக நீர் மேலேறும். இது ஆவியுர்ப்பு இழுவிசை எனப்படும்.
மேலும் தாவரங்களின் காழ்கலன்களினூடாக நீரும் அதிற் கரைந்துள்ள கனியுப்புக்களும் மேல்நோக்கி ஏறுவதற்கு வேரினால் தள்ளுகை பிரயோகிக்கப்படும். இது வேரமுக்கம் எனப்படும்.
வேரமுக்கம் மூலமாக தாவரங்களில் நீரைக்கொண்டு செல்லக்கூடிய உச்ச உயரம் 18 மீற்றர் ஆகும். எனினும் உயரமான தாவரங்களின் பகுதிகளிற்கு பிரதானமாக ஆவியுர்ப்பு இழுவிசை மூலமே நீர் எடுத்துச் செல்லப்படுகின்றது. இது தாவரங்களில் நீரைக்கொண்டு செல்லக்கூடிய உச்ச உயரம் 50 - 60 மீற்றர் ஆகும்.
இவை தவிர பூண்டுத்தாவரங்களில் (புற்களில்) நீரைக்கொண்டு செல்லலில் மயிர்த்துளை ஏற்றம் எனும் இழுவிசையும் தொழிற்படுகின்றது. எனினும் அது 10 - 15 சென்ரி மீற்றர் வரையுமே தொழிற்படக்கூடியது.
ஆவியுயிர்ப்பு(Transpiration)
தாவரங்களின் காற்றுக்குரிய பகுதிகளில் இருந்து நீர் ஆவிநிலையில் வெளியேறுதல/ இழக்கப்படல் ஆவியுயிர்ப்பு எனப்படும்.
இது மூன்று வகைப்படும்.
1. இலைவாய் ஆவியுயிர்ப்பு
2. புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு.
3. பட்டைவாய் ஆவியுர்ப்பு.
இலைவாய் ஆவியுயிர்ப்பு
இது மொத்த ஆவியுர்ப்பில் அதிகளவில் நடைபெறும். (80-90%)
இவ் ஆவியுயிர்ப்பு இலைகளிலுள்ள இலைவாய்களினூடாகவே அதிகளவில் நிகழ்கின்றது. இதனால் இது இலைவாய் ஆவியுயிர்ப்பு எனப்படும்.
புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு.
இது மொத்த ஆவியுர்ப்பில் 10-20% நிகழும்.
இவ் ஆவியுயிர்ப்பு தாவரத்தின் பூக்கள், காய்கள் போன்றவற்றின் புறத்தோலினூடாக நீர் ஆவி நிலையில் வெளியேறுதல் இது புறத்தோலுக்குரிய ஆவியுர்ப்பு எனப்படும்.
வரள்நிலத் தாவரங்களில் தண்டு நன்கு தடித்திருப்பதனால் இவ் ஆவியுயிர்ப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்படும்.
பட்டைவாய் ஆவியுர்ப்பு
இவ் ஆவியுயிர்ப்பு தடித்த வைரம் செறிந்த தாவரப்பகுதியில் உள்ள பட்டைவாய்களினூடாக நீர் ஆவியாக இழக்கப்படல் பட்டைவாய் ஆவியுர்ப்பு எனப்படும்.
இது புறக்கத்தக்கது.
இருவித்திலைத் தாவர இலையின் குறுக்கு வெட்டுமுகம்
Note:- தாவர இலைகளில் இருந்து அதிகளவான நீர் அவியாக வெளியேறு கின்றது.
தாவரங்களின் நிலவுகைக்கு ஆவியுர்ப்பு பங்களிப்புச் செய்யும் முறையைக் கண்டறிதல்
வாடிய நிலையிலுள்ள தாவரத்திற்கு நீர் ஊற்றும்போது அது மீண்டும் பழைய நிலையை அடைகிறது என்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். எனவே தாவரங்கள் வாடுவதற்குக் காரணம் நீர்ப்பற்றாக்குறையே காரணமாகும்.தாவரங்களில் நீர்ப்பற்றாக்குறை எவ்வாறு ஏற்படுகின்றது எனக்காட்டல்
ஒரு சட்டித்தாவரத்தின் ஒரு சிறு கிளையை பொலித்தீன் உறையினால் மூடிக்கட்டி சில மணி நேரத்தின் பின்பு அவதானித்தபோது அப் பொலித்தீன் உறையின் உட்புறத்தில் நீர்த்துளிகள் படிந்து காணப்படும். அந்நீர்த்துளிகள் நீரற்ற செப்புசல்பேற்றை நீலநிறமாக மாற்றும் இதிலிருந்து தாவரங்களி லிருந்து நீர் வெளியேறுகின்றது என முடிவு செய்யலாம். எனினும் இந்நீர் வெளியேற்றம் கண்களுக்குப் புலப்படமாட்டாது. எனவே நீரானது ஆவி நிலையில் வெளியேறியுள்ளது. அந்நீர் குளிர்ச்சியடைந்து பொலித்தீன் உறையின் உட்சுவரில் நீர்த்துளிகளாகப் படியும்.
ஆவியுர்ப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
நீர் ஆவிநிலையில் தாவரங்களிலிருந்து வெளியேறுதலே ஆவியுயிர்ப்பு ஆகும்.எனவே ஆவியாதலைப் பாதிக்கும் எல்லாக் காரணிகளும் ஆவியுர்ப்பையும் பாதிக்கும்.
ஆவியுர்ப்பில் பங்களிப்புச் செய்யும் சூழற்காரணிகள்
1. சூழல் வெப்பநிலை
2. வளிமண்டல ஈரப்பதன்
3. காற்றின் வேகம்
4. ஒளிச்செறிவு
5. மண்ணீரின் அளவு
சூழல் வெப்பநிலை
வெப்பநிலை அதிகரிக்கும் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
வளிமண்டல ஈரப்பதன்
வளிமண்டல ஈரப்பதன், வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவில் தங்கியுள்ளது. எனவே வளியிலுள்ள நீராவியினளவு குறையும் போது வளிமண்டல ஈரப்பதன் குறையும். இதனால் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
காற்றின் வேகம்
காற்றின் மூலமாக இலையைச் சூழ்ந்து காணப்படும் நீராவி எடுத்துச் செல்லப்படும். எனவே காற்றின் வேகம் அதிகரிக்கும் போது ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
ஒளிச்செறிவு
ஒளியுள்ளபோது இலைவாய்கள் திறந்திருக்கும். ஆகவே வெப்பநிலையும் அதிகமாகக் காணப்படும் எனவே ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
மண்ணீரின் அளவு
கிடைக்கத்தக்க மண்ணீரின் அளவு அதிகரிக்கும் போது தாவரங்களில் அகத்துறிஞசப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும். இதனால் ஆவியுர்ப்பு வீதமும் அதிகரிக்கும்.
ஆவியுர்ப்பு விகிதத்தை அளவிடுவதற்கு கனோங்கின் உறிஞ்சன்மானியைப் பயன்படுத்துதல்
ஆவியுயிர்ப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை சோதிப்பதற்கு கனொங்கின் உறிஞ்சன் மானி பயன்படுத்தப்படுகின்றது.உறிஞ்சன்மானியையும் தாவரத்துடன் சேர்ந்த கிளையையும் நீரினுள் அமிழ்த்தி நீரினுள் வைத்து கிளையை வெட்டி படத்திற்காட்டியவாறு பொருத்திக் கொள்ள வேண்டும். தண்டினுள் வளிக் குமிழிகள் செல்வதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு நீரினுள் வைத்து வெட்டப்படும். பின்னர் கிளை பொருத்தப்பட்ட பகுதிகள் வசலீன் கொண்டு வளியிறுக்கம் செய்யப்படும்.
மேலும் உறிஞ்சன்மானியின் மயிர்த்துளைக் குழாயை நுனியை சற்று உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் வளிக்குமிழியொன்றை அதன் திறந்த முனையினூடாக உட்செல்ல அனுமதிக்கப்படும்.
இலைகளிலிருந்து ஆவியுயிர்ப்புமூலம் நீர் வெளியேறும்போது வளிக்குமிழிää கிளை பொருத்தப்பட்டு உள்ள திசையை நோக்கி அசையும்ää குழாயில் அளவிடை குறிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் வளிக்குமிழி அசைந்த தூரத்தை அளந்து கொள்க அத்துடன் அதற்கு எடுத்த நேரத்தை அளந்து கொள்க.
இதிலிருந்து பல்வேறு சூழல் நிலமைகளில் வைத்து ஆவியுயிர்ப்பு வீதத்தை துணிந்து கொள்ள முடியும்.
ஆவியுர்ப்பைக் குறைப்பதற்காக தாவரங்கள் கொண்டுள்ள இசைவாக்கங்கள்
நீர்ப்பற்றாக்குறையான சூழலில் வாழும் தாவரங்கள் மேலதீக நீரிழப்பைத் தடுப்பதற்காக பின்வரும் இசைவாக்கங்களைக் காட்டுகின்றன.
1. இலைகள் உதிர்தல், முட்களாக திரிபடைதல், தண்டு சதைப்பற்றாதல்
 Eg:- நாகதாளி, கள்ளி
2. குழிகளில் அமிழ்ந்துள்ள இலைவாய்கள் காணப்படல்.
 Eg:- இராவணன் மீசை, அலரி
3. இலைகளின் மீது மயிர்கள் காணப்படல்
 Eg:- பூசணி, சூரியகாந்தி
4. தடித்த புறத்தோல் காணப்படல்
 Eg:- அலரி, ஆலமரம்
5. இலைகள் சுருண்டு காணப்படல்
  Eg:- நெல், புல்
6. குறிப்பிட்ட காலத்தில் இலைகள் உதிருதல் (இலையுதிர்வு)
  Eg:-இறப்பர், தேக்கு
தாவரங்களில் ஆவியுர்ப்பின் அனுகூலங்கள்
1. தாவரங்களின் உயரமான பகுதிகளுக்கு பதார்த்தங்கள் கடத்தப்படல்.
2. இலைகளைச் சுற்றி நீராவி காணப்படுவதனால் சூரிய வெப்பத்தினால் 
    இலைகளுக்கு பாதிப்பு  ஏற்படாது.
3. தாவரங்கள் குளிர்ச்சியடையும்.
4. தாவரங்களால் அதிகளவு நீர் உறிஞ்சப்படல்.
5. தாவரத்தினுள் கனியுப்புக்களை பரம்பலடையச் செய்தல்.
1. தாவரங்களில் நீரிழப்பு ஏற்படும்.
2. தாவரங்கள் வாடுவதால் ஒளித்தொகுப்புப் பாதிக்கப்படல்.
கசிவு
அதிகாலை வேளையில் புற் தாவரங்களின் இலைகளின் நுனிகளிலும்ää சேம்புத் தாவரங்களின் இலைகளின் நுனிகளிலும் திரவத்துளிகள் காணப்படுவதை அவதானிக்கலாம். இவை இத்தாவர உட்பகுதியிலிருந்து நீர் செல்துளைகளினூடாக வெளியேறிய நீர்த்துளிகள் கசிவு ஆகும். இவை பின்வரும் கூறுகளைக் கொண்டன.
அதிகளவு நீர் + கரையப்பதார்த்தங்கள் + கனியுப்புக்கள்
இது வேரமுக்கத்தின் ஒரு நேரடி விளைவாகும். ஆவியுர்ப்பிற்கு எதிரான நிபந்தனைகளிலேயே இது நடைபெறும். ஏனெனில் மண்ணீர் அடக்கமும் சாரீரப்பதனும் உயர்வாக இருக்கும் போதே பெரும்பாலான தாவரங்களில் வேரமுக்கம் ஏற்படும் இச்சந்தர்ப்பங்களில் தாவரத்தினுள் அயன்கள் உயிர்ப்பான அகத்துறிஞ்சல் மூலம் உட்செல்லும் இவ்வயன்கள் வேரின் காழினுள் கரையச் செறிவை அதிகரிப்பதனால் அதன் நீரழுத்தம் மண்ணீர் அழுத்தத்தை விடக்குறையும். எனவே தாவரத்தினுள் நீர் உட்செல்லும் இதன் காரணமாக ஏற்படும் அமுக்கமே வேரமுக்கமாகும்.
மனிதனின் உடற்தொழிற்பாட்டுக்குக் குருதி பங்களிப்புச் செய்யும் முறையை ஆராய்தல்
அது மனித உடல் நிறைக்கேற்ப மாறுபடலாம்.
• எமது உடலில் வெட்டுக்காயம் அல்லது உராய்வு ஏற்படும் போது குருதி
வெளியேறும். பொதுவாக எமது உடலில் இருந்து ஒரு துளி குருதி
வெளியேறினால் அது மீண்டும் உருவாக 20 நிமிடங்கள் வரை எடுக்கும்.
• உடலில் குருதி ஆனது குருதிக் கலன்களினுள் காணப்படுகின்றது.
உடலில் இருந்து குருதியைப் பெறும்போது அது ஏகவினத்தன்மை கொண்ட பாய்மமாகக் காணப்பட்ட போதிலும் அதனைப் பரிசோதனைக்குழாயில் இட்டு வைத்ததும் அது கடும் சென்நிற ஜெலி போன்ற திண்மக் கூறாகவும் வேறாகிக் காணப்படும்.
குருதிப்பூச்சைக் கொண்ட வழுக்கியொன்றை நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிப்பின் குருதியில் உள்ள கூறுகளை தெளிவாக அவதானிக்க முடியும்.
குருதிப்பாய்மத்தில் பல எண்ணிக்கையான கலங்கள் இருப்பதைக் காணலாம். அவற்றுள் அனேக கலங்கள் செந்நிறமானவை. அவற்றைத் தவிர பல அளவுகளினாலான வேறு கலங்களையும் அவதானிக்கலாம்.
குருதியில் காணப்படும் செங்குழியங்களை அகற்றி வெண்குழியங்களை தெளிவாக அவதானிப்பதற்கு ஒரு குருதித்துளியை மூடித்துண்டால்(Cover Slip) மூடி சுற்றிவர ஜதான அசற்றிக்கமிலத் துளிகளை இட்டு அவதானிக்கும்போது இது சாத்தியமாகும்.
குருதிப்பாய்மத்தில் பல எண்ணிக்கையான கலங்கள் இருப்பதைக் காணலாம். அவற்றுள் அனேக கலங்கள் செந்நிறமானவை. அவற்றைத் தவிர பல அளவுகளினாலான வேறு கலங்களையும் அவதானிக்கலாம்.
குருதியில் காணப்படும் செங்குழியங்களை அகற்றி வெண்குழியங்களை தெளிவாக அவதானிப்பதற்கு ஒரு குருதித்துளியை மூடித்துண்டால்(Cover Slip) மூடி சுற்றிவர ஜதான அசற்றிக்கமிலத் துளிகளை இட்டு அவதானிக்கும்போது இது சாத்தியமாகும்.
செங்குருதிக்கலங்கள்/ செங்குழியங்கள் (Red Blood Cells/ Erythrocytes)
• 7.5µm விடடமுடைய கலங்கள்.
• சிறிய/ கருவற்ற/ ஈமோகுளோபின் எனும் செந்நிறப்பொருளைக் கொண்ட
கலங்கள்.
• இரு குழிவான வட்டத்தட்டுருவான கலங்கள். இவை தனியாகவோ அல்லது
தொகுதிகளாகவோ குருதிப்பாய்மத்தில் இயங்கிய வண்ணம் காணப்படும்.
• இக்கலங்களின் விட்டம் குருதிமயிர்க்குழாய்களின் உள்விட்டத்தை ஒத்துக்
காணப்படுவதனால் குருதிமயிர்க்குழாய்களினூடாக மெதுவாகவே
அசைகின்றன.
• இதன் காரணமாக வாயுப்பரிமாற்றம் வினைத்திறனாக நடைபெறுகின்றது.
• 1ml3 குருதியில் 5,000,000 செங்குழியங்கள் உள்ளன.
• செங்குழியங்களிலுள்ள ஈமோகுளோபின் காரணமாக குருதிக்குச் செந்நிறம்
கிடைக்கின்றது. இது இரும்பைக்கொண்ட Haematin எனும்
குருதிநிறப்பொருளையும், Globin எனப்படும் புரதத்தையும் கொண்டு
காணப்படும்.
• செங்குழியங்கள் மனிதனின் இளம்பருவத்தில் ஈரலிலும், மண்ணீரலிலும்
உருவாக்கப்படுகின்றன. எனினும் நிலையுடலி நிலையில் செவ்வென்பு
மச்சையில் உருவாக்கப்படுகின்றன.
• செங்குழியங்கள் 4மாதம்/ 120 நாட்கள் வாழ்தகவுடையவை.
• இவை தங்களின் வாழ்தகவின் பின்னர் ஈரல், மண்ணீரல் ஆகியவற்றில்
அழிக்கப்படுகின்றன.
செங்குழியத்தின் தொழில்கள்
1.ஒட்சிசன்செறிவு கூடிய இடத்திலிருந்து ஒட்சிசன்செறிவு குறைந்த
இடத்திற்கு ஒட்சிசனை ஒட்சி ஈமோகுளோபின் வடிவில் கடத்துதல்.
இதன்போது குருதியின் செந்நிறம் அதிகரித்துக் காணப்படும்.
2.சுவாச மேற்பரப்பிலிருந்து செல்லும் குருதி, கலங்களை அடைந்தவுடன்
ஒட்சிஈமோகுளோபின் பிரிகையடைந்து ஒட்சிசன் வெளிவிடப்படும்.
இவ்வாறு வெளிவிடப்படும் ஒட்சிசன் கலங்களினுள் பரவலடையும்.
 
No comments:
Post a Comment